Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கென கூடுதலாக பல்வேறு சலுகைகளை மின்வாரியத்துறை வழங்க இருப்பதாக தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கென கூடுதலாக பல்வேறு சலுகைகளை மின்வாரியத்துறை வழங்க இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 31 July 2023 3:17:17 PM

மாற்றுத்திறனாளிகளுக்கென கூடுதலாக பல்வேறு சலுகைகளை மின்வாரியத்துறை வழங்க இருப்பதாக தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள் .. தமிழகத்தில் பல துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்வாரியத் துறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், தற்போது தமிழக மின்வாரியத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

electricity board,disabled ,மின்வாரியத்துறை ,மாற்றுத்திறனாளி

அதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் படியான ஏற்பாட்டினை செய்து தர வேண்டும் என்றும் , இடம் மாறுதலின் அடிப்படையில் ஊழியர்களின் விருப்பத்தின் பேரிலேயே பணிபுரிய மின்வாரியம் அனுமதி தர வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசு வழங்கி வரும் அனைத்து சலுகைகளையும் மின்வாரியத்துறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்க வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை மின்வாரியத்துறை கூடிய விரைவில் பரிசீலனை செய்ய இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Tags :