Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மார்க் ஊழியர்களின் ஊதிய உயர்வு அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்

டாஸ்மார்க் ஊழியர்களின் ஊதிய உயர்வு அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்

By: vaithegi Sun, 24 Sept 2023 7:25:22 PM

டாஸ்மார்க் ஊழியர்களின்  ஊதிய உயர்வு அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளின் மூலம் மதுபான விற்பனையை அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தி கொண்டு வருகிறது. டாஸ்மார்க் நிறுவனங்களுக்கான ஊழியர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுகின்றனர். மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என்று 24 ஆயிரம் பேர் தமிழக டாஸ்மார்க் நிறுவனங்களில் பணியாற் கொண்டு றி வருகின்றனர்.

இதனை அடுத்து இவர்கள் அரசு நிர்ணயித்த வேலையை விட மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணத்தை விதித்து உள்ளனர்.மதுபானத்திற்கு ₹ 10க்கு மேல் கூடுதலாக விற்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஏற்கனவே இக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று அரசு தெரிவித்திருந்தது.

govt,tasmark employees ,அரசு ,டாஸ்மார்க் ஊழியர்கள்

ஆனால் டாஸ்மார்க் ஊழியர்கள் மிகவும் குறைவான ஊதியத்தில் பணியாற்றுவதன் காரணமாகத்தான் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையாக டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இக்கோரிக்கையை ஏற்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|