Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலியாக உள்ள செவிலியர்களுக்கான நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள்

காலியாக உள்ள செவிலியர்களுக்கான நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள்

By: vaithegi Thu, 19 Oct 2023 3:56:31 PM

காலியாக உள்ள செவிலியர்களுக்கான நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள்

சென்னை:தமிழகத்தில் மருத்துவத் துறையில் செவிலியர்கள் மற்றும மருத்துவ பணியாளர்களுக்கான காலியிடங்கள் தேவை இருப்பின் அவசர கதியில் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.

அதன் பின் முறையான தேர்வு முறைகளின் மூலம் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் 5000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமால் உள்ளனர்.

action,government,nurses ,நடவடிக்கை ,அரசு ,செவிலியர்கள்


இதன் காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 250 கோடி அரசுக்கு செலவாகி கொண்டு வருகிறது. செவிலியர்கள் பணி நிரந்தரத்திற்கான ஒப்புதல் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதையடுத்து நிதித் துறை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தொகுப்பூதிய நர்சுகள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|