Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் குறையும் என தகவல்

நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் குறையும் என தகவல்

By: Nagaraj Sun, 13 Nov 2022 2:52:50 PM

நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் குறையும் என தகவல்

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

falling across,southwest bay,tamil nadu,widespread, ,காற்றழுத்த தாழ்வு, தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வங்கக்கடலில்

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்.

வரும் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :