Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளதாக தகவல் தெரிவிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளதாக தகவல் தெரிவிப்பு

By: vaithegi Mon, 29 Aug 2022 04:34:41 AM

உலகளவில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளதாக தகவல் தெரிவிப்பு

சீனா: சீனாவில் முதன் முதலில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.இதனை அடுத்து பல்வேறு அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் பல லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து கொண்டு வருகிறது.

எனவே இதன் மூலம் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்து விட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

corona,number,worldwide ,கொரோனா ,எண்ணிக்கை ,உலகளவில்

இதைப்போன்று கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் 64.85 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.41 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 10.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4.43 கோடி பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். 3.46 கோடி பாதிப்புகளை கொண்ட பிரான்ஸ் 3-ம் இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :
|
|