Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்

பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்

By: vaithegi Fri, 03 Feb 2023 6:23:41 PM

பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை கேரளா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கேரளா நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அவர்கள் பல முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுபானங்கள் மீது சமூக பாதுகாப்பு செஸ் வரி (Social Security Cess) விதிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். எனவே இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

petrol,diesel,liquor ,பெட்ரோல், டீசல், மதுபானங்கள்

இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான சமூக பாதுகாப்பு செஸ் வரியால் அதன் விலையானது ரூ 2 உயர்ந்து இருக்கிறது. எனவே இதன் மூலம் கேரளா அரசிற்கு கூடுதலாக 750 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

மேலும் அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான சமூக பாதுகாப்பு செஸ் வரி காரணமாக கேரளா அரசிற்கு கூடுதலாக 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|