Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 5 ஆண்டுகளை விட இந்தாண்டு தான் தக்காளி விலை மிகவும் உயர்ந்து இருப்பதாக தகவல்

கடந்த 5 ஆண்டுகளை விட இந்தாண்டு தான் தக்காளி விலை மிகவும் உயர்ந்து இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 24 July 2023 11:27:09 AM

கடந்த 5 ஆண்டுகளை விட இந்தாண்டு தான் தக்காளி விலை மிகவும் உயர்ந்து இருப்பதாக தகவல்

இந்தியா: இந்தியாவில் கடந்த 2 மாதமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் தக்காளி விலை எதிர்பாராத பெரும் உச்சத்தை தொட்டது. இதற்கு முன்னதாக ஒரு கிலோ தக்காளி ரூ.10, ரூ.15 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1 கிலோ ரூ.130 க்கு மேல் உயர்ந்துள்ளது.

தக்காளி வரத்து குறைவாக இருப்பதே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது 2018 ஆம் ஆண்டு ஜூலையில் தக்காளி விலை கிலோ ரூ.28.09க்கும், 2019 ஆம் ஆண்டு மே மாதம் ரூ.52.09க்கு விற்பனை செய்யப்பட்டது.

tomato .sales ,தக்காளி .விற்பனை


இதையடுத்து 2020 ஜூலையில் கிலோ ரூ.46.86க்கும், 2021 ஆம் ஆண்டு நவம்பர் ரூ.99.22க்கும், 2022 ஆம் ஆண்டு ரூ.76.86க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஜூலையில் ரூ.110 க்கு தற்போது ரூ.130 க்கு வரை விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து தொடங்கி உள்ளதால் அதன் விலை சற்று குறைய தொடங்கி இருக்கிறது. தற்போது கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் 1 கிலோ ரூ.90க்கும் சில்லறை விலையில் ரூ.110க்கு விற்க தொடங்கி இருக்கிறது.


Tags :