Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கை ... முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கை ... முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

By: vaithegi Mon, 31 Oct 2022 9:22:25 PM

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கை  ...   முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

சென்னை: முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை .... தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. வருகிற நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

advisory,monsoon series action ,ஆலோசனை ,பருவமழை தொடர் நடவடிக்கை


இதனையடுத்து அதன்பின், நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து, பின்மீண்டும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது டிசம்பர் 27ம் தேதி வரை நீடிக்கும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :