Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் வேலை வாய்ப்பினை விகிதம் அதிகரித்து உள்ளதாக தகவல்

நாட்டில் வேலை வாய்ப்பினை விகிதம் அதிகரித்து உள்ளதாக தகவல்

By: vaithegi Fri, 22 Sept 2023 12:55:02 PM

நாட்டில் வேலை வாய்ப்பினை விகிதம் அதிகரித்து உள்ளதாக தகவல்


இந்தியா: நாட்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் உள்ள இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை அதிக அளவில் ஏற்படுத்தி தருகிறது. எனவே இதற்கான திட்டங்கள் பற்றி அரசுகள் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

மேலும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்புகளை அதிக அளவில் ஏற்படுத்தித் தருகிறது. தற்போது ஸ்டேட் ஆப் வொர்கிங் இந்தியா 2023 என்ற ஆய்வறிக்கை ஒன்று நடத்தப்பட்டது.

employment,unemployment,india ,வேலை ,வேலைவாய்ப்பின்மை      ,இந்தியா

இதையடுத்து இந்த ஆய்வறிக்கையின் முடிவில் கடந்த 2021 – 22-ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் நாட்டில் படித்த 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் 42 சதவீதம் அளவிலானவர்கள் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று 35 வயதுக்கு மேல் உள்ள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது வெறும் 5 சதவீதமாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கு உட்பட்ட வேலை வாய்ப்பற்றவர்களின் விகிதமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :