Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் சில விதிமுறைகள் அமல்...தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதாக தகவல்

இந்தியாவில் சில விதிமுறைகள் அமல்...தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதாக தகவல்

By: vaithegi Sat, 02 July 2022 7:37:07 PM

இந்தியாவில் சில விதிமுறைகள்  அமல்...தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதாக தகவல்

இந்தியா: இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும்.

இதை தொடர்ந்து தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற முடியும்.

இந்த திட்டம் முதலில் தெலுங்கானா – ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து இறுதியாக இத்திட்டம் அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி 36 மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ration card,cancellation ,ரேஷன் கார்டு ,ரத்து

தற்போது ரேஷன் பொருட்களை தகுதியற்றவர்கள் பெற்று கள்ள சந்தைகளில் அதிக லாபத்திற்கு விற்கின்றனர். அதனால் ரேஷன் பொருட்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்க அரசு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றங்கள் வர உள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதன்படி தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது. இதனால் ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

Tags :