Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்

‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்

By: vaithegi Tue, 17 Oct 2023 3:42:43 PM

‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்


‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு (2024) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

rajini,shooting ,ரஜினி ,படப்பிடிப்பு

இந்நிலையில், ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதற்கு முன்பாக நடிகர் - நடிகையர் தேர்வு, கதை விவாதம் உள்ளிட்ட பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Tags :
|