மீனவர் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்
By: vaithegi Sat, 25 Nov 2023 10:56:24 AM
சென்னை: தமிழக அரசு துறை வாரியாக அந்தந்த வாரியங்களை சேர்ந்த பொதுமக்களின் நலனுக்காக உதவித்தொகைகளை வழங்கி கொண்டு வருகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் உள்ள பவானி ஆற்றில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று 2 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழகத்தில் இந்தாண்டில் மட்டும் சுமார் 4 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்புகளுக்காக ஆற்றில் விடப்பட்டு உள்ளது. அதில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணைப்பகுதியில் விடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அணைப்பகுதியில் கூட்டுறவு சங்க மீனவர்கள் மீன்பிடியை குத்தகை முறைக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூட்டுறவு சங்க மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூபாய் 5,000 லிருந்து ரூபாய் 8000 ஆக அதிகரிக்க வழங்கப்பட உள்ளது. தேவை உள்ள இடங்களில் மீன் விற்பனை நிலையங்களும், இறால் பண்ணை அமைத்து இறால் ஏற்றுமதி பணிகளும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.