Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 20 Nov 2023 3:09:19 PM

மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது.

அதன் பின் இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.35 லட்சம் பேருக்கு 2 ஆம் கட்டமாக உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு வர இருக்கும் நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

womens entitlement,relaxations,beneficiaries ,மகளிர் உரிமைத்தொகை,தளர்வுகள் ,பயனாளர்கள்

அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்கள் முன்னதாக இத்திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மேலும் அதிக பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இதன் மூலம் தகுதியுடைய பெரும்பான்மையான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :