Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை அமைக்க உள்ளதாக தகவல்

திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை அமைக்க உள்ளதாக தகவல்

By: vaithegi Mon, 27 June 2022 3:16:28 PM

திருச்செந்தூர் கோவிலில்  மூத்த குடிமக்கள்  தரிசனம் செய்ய தனிப்பாதை அமைக்க உள்ளதாக தகவல்


திருச்செந்தூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்த பிறகு அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அறிவித்திருந்தது. அதன்படி திருச்செந்தூர் கோவிலில் கடந்த மார்ச் 9ம் தேதி முதல் இலவச பொது தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து கொன்று வருகின்றனர்.

thiruchendur,senior citizens,darshan ,திருச்செந்தூர் ,மூத்த குடிமக்கள்,தரிசனம்

அதன் காரணமாக பக்தர்களின் நலனுக்காக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை ஒன்றை அமைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள்ஒன்று கிடைத்துள்ளன.

இதையடுத்து கோவிலின் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் தங்களின் வயது சான்றிதழாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து செல்லலாம். மேலும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :