Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக தகவல்

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக தகவல்

By: vaithegi Wed, 31 Aug 2022 8:17:27 PM

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக தகவல்

புதுவை : மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அந்தந்த மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை பல வித சலுகைகள் மற்றும் மாற்றங்களை கொண்டு வந்தது.இதை அடுத்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று பல வித சிறப்பு அம்சங்களை அறிவித்துள்ளார். அடுத்த கல்வி ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

syllabus,innovation,students ,பாடத்திட்டம்,புதுவை ,மாணவர்கள்

மேலும் இது மட்டுமின்றி மாணவர்களுக்கு 1 ரூபாயில் செயல்பட்டு வரும் சிறப்பு பேருந்துகள் இனி இலவசமாக மாணவர்களுக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து இருந்ததால் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் ஏற்பட்டால் மாணவர்களின் கற்றல் திறனில் மாறுபாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :