Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வரவுள்ளதாக தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வரவுள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 27 July 2023 1:36:41 PM

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வரவுள்ளதாக தகவல்

இந்தியா: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமல்கை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நாளை நடைபயணம் தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் இருந்து அவர் நடை பயணத்தை தொடங்க உள்ள நிலையில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், அமித்ஷா அவர்களின் பயணம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது.

amit shah,madurai ,அமித்ஷா ,மதுரை


இதையடுத்து அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாளை மதியம் 1 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார். மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.அதைத்தொடந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். மாலை 5.20 முதல் 5.40 வரை தங்கும் விடுதியில் ஓய்வெடுக்க உள்ள அமித்ஷா, மாலை 5.45 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :