Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

இந்தியாவில் அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Thu, 24 Aug 2023 4:11:14 PM

இந்தியாவில் அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

இந்தியா: இந்தியாவில் கடந்த 2 மாதங்களாகவே காய்கறி விலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் தெரிவிப்பு ...இந்தியாவில் கடந்த ஜூலை மாத சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எனவே இதற்கு முக்கிய காரணமாக காய்கறி விலையும், மளிகை பொருள்களின் விலையும் அதிகரிப்பது தான். மேலும் அது மட்டுமில்லாமல் பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் ஆகியவற்றவையும் காரணமாக இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்தனர். இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

price,vegetable ,விலை ,காய்கறி

அதாவது செப்டம்பர் மாதத்திலிருந்து காய்கறியின் விலை உயர்வு மற்றும் தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் முதல் பணவீக்கம் குறையும் என தெரிவித்தார்.

மேலும் அது மட்டுமில்லாமல் புவிசார் பதற்றங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினாலும், தானிய வகைகளின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவனித்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :
|