Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடும் பனிப்பொழிவாக இருக்கு... கவனமாக வாகனத்தை இயக்க எச்சரிக்கை

கடும் பனிப்பொழிவாக இருக்கு... கவனமாக வாகனத்தை இயக்க எச்சரிக்கை

By: Nagaraj Mon, 12 Dec 2022 11:43:23 AM

கடும் பனிப்பொழிவாக இருக்கு... கவனமாக வாகனத்தை இயக்க எச்சரிக்கை

கனடா: ரொறன்ரோ மற்றும் அதன் பெரும்பாக பகுதகளில் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்யுமாறு ரொறன்ரோ போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுப்போக்குவரத்து தாமதமாகலாம் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

warning,advisory,drivers,snow,decrease ,எச்சரிக்கை, அறிவுறுத்தல், வாகன சாரதிகள், பனிப்பொழிவு, குறையும்

பத்து சென்டி மீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் பாதைகளில் பனி மூட்டம் காணப்படும் எனவும் கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் அதிகளவு பனிப்பொழிவு காணப்படும் எனவும் பிற்பகலில் பனிப்பொழிவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் நடக்கும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் மிக அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|