Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு .. பாமக நிறுவனர்

மருத்துவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு .. பாமக நிறுவனர்

By: vaithegi Sat, 01 July 2023 11:35:28 AM

மருத்துவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு .. பாமக நிறுவனர்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, "மக்களைக் காக்கும் கடவுள்கள் மருத்துவர்கள்; அவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு!

அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும் அசையாது. மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும்.

founder of pamaga,doctors ,பாமக நிறுவனர்,மருத்துவர்கள்

மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :