Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை

By: Nagaraj Sat, 12 Sept 2020 7:27:33 PM

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை

அரசின் கொள்கை... நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் தூய்மைப் பணியாளர்கள் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில். கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நற்சான்றிதழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

erode,minister senkottayan,neet selection,government policy ,ஈரோடு, அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வு, அரசு கொள்கை

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் புதிதாக அரசுப் பள்ளியில் சேர்ந்து உள்ளனர். செப்டம்பர் மாதம் இறுதிவரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை. இந்த ஆண்டு தமிழகத்தில் 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்றார்.

Tags :
|