Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை நாங்கள் அழித்தது உண்மைதான் - சீனா ஒப்புதல்

கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை நாங்கள் அழித்தது உண்மைதான் - சீனா ஒப்புதல்

By: Monisha Thu, 21 May 2020 1:36:23 PM

கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை நாங்கள் அழித்தது உண்மைதான் - சீனா ஒப்புதல்

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் கோவிட் 19 வைரஸ் முதன் முதலாக சீனாவின் உகான் ஞபகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. ஆனால், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற பேச்சுக்களும் எழ தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என அமெரிக்காவும், இல்லை அமெரிக்காதான் காரணம் என சீனாவும் மாறி மாறி வசை பாடி வருகின்றன. இது குறித்த விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் விஷயத்தில் சீனா உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை உலகிற்கு கூற வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார்.

covid 19 virus,china approval,virology lab,us president trump,world health organization ,கோவிட் 19 வைரஸ்,சீனா ஒப்புதல்,வைராலஜி ஆய்வகம்,அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,உலக சுகாதார அமைப்பு

இந்த நிலையில் தற்போது சீனா ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை நாங்கள் அழித்தது உண்மைதான் என சீனாவின் சொந்த தேசிய சுகாதார ஆணையத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும், கொரோனா வைரஸின் மாதிரிகளை அழிக்க பெய்ஜிங் அங்கீகரிக்கப்படாத ஆய்வகங்களுக்கு உத்தரவிட்டதாக அறிவியல் மற்றும் கல்வித் துறையின் அதிகாரி லியு டெங்ஃபெங் கூறி உள்ளார்.

covid 19 virus,china approval,virology lab,us president trump,world health organization ,கோவிட் 19 வைரஸ்,சீனா ஒப்புதல்,வைராலஜி ஆய்வகம்,அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,உலக சுகாதார அமைப்பு

இதற்கிடையே, கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன. இதுவரை இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 116 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரெயேசஸ், பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags :