Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைப்பு பிரச்சினையில் தலையிட கோரி மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம்

ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைப்பு பிரச்சினையில் தலையிட கோரி மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம்

By: Monisha Thu, 28 May 2020 09:39:56 AM

ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைப்பு பிரச்சினையில் தலையிட கோரி மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்சினையில் தலையிட கோரி தேசிய தகவல் தொழில்நுட்ப செனட் அமைப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிரா முழுவதும் பல ஐ.டி., ஐ.டி.எஸ், பி.பி.ஓ., கே.பி.ஓ. நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். அங்கு பணி செய்யும் ஊழியர்களை எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கி வருகின்றன.

மேலும் சம்பள குறைப்பு மற்றும் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினைக்கு ஊழியர்கள் எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் நிறுவன உரிமையாளர்கள் கடுமையான மற்றும் இணக்கமற்ற முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

it companies,redundancy,pay cuts,national information technology senate,uddhav thackeray ,ஐ.டி. நிறுவனங்கள்,ஆட்குறைப்பு,சம்பள குறைப்பு,தேசிய தகவல் தொழில்நுட்ப செனட்,உத்தவ் தாக்கரே

தனியார் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படாததால் தினசரி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியையும், வருமானத்தையும் இழந்து வருகிறார்கள். இது மராட்டிய அரசின் விதிமுறைகளை முழுமையாக மீறும் செயலாகும். இதுபோன்ற சோதனை காலங்களில் பணியாளர்களின் பணியை பாதுகாக்க நிறுவனங்களுக்கு அரசு தேவையான உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஐ.டி., ஐ.டி.எஸ், பி.பி.ஓ., கே.பி.ஓ. நிறுவனங்களின் பணிபுரியும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணி, வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பாதுகாக்க இந்த பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :