Advertisement

இன்னும் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 07 Aug 2023 3:21:43 PM

இன்னும் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்று முதல் வருகிற 09.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து வருகிற 10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து வருகிற 12.08.2023 மற்றும் 13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

அதிகபட்ச வெப்பநிலை:
07.08.2023 மற்றும் 08.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|