Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்

இன்று முதல் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 28 July 2023 10:16:43 AM

இன்று முதல் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்னும் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு .. கடந்த 26-ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இதனை அடுத்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்


அதனை தொடர்ந்து இன்று முதல் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :
|