Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 29 Jan 2023 11:16:09 AM

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ...... நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.

அதன் பிறகு தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 31.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01.02.2023 இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

rainy,chennai,northeast coastal districts ,மழை ,சென்னை,வடதமிழக கடலோர மாவட்டங்கள்


எனவே இதன் காரணமாக இன்று வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை தமிழக கடலோர மாவட்டங்கள். அதனை வட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.01.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|