Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடமாவட்டங்களில் மழை பெய்யலாம்; வானிலை மைய இயக்குனர் தகவல்

வடமாவட்டங்களில் மழை பெய்யலாம்; வானிலை மைய இயக்குனர் தகவல்

By: Nagaraj Fri, 14 Aug 2020 08:31:51 AM

வடமாவட்டங்களில் மழை பெய்யலாம்; வானிலை மைய இயக்குனர் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain,weather center,announcement,fishermen,strong winds ,
மழை பெய்யும், வானிலை மையம், அறிவிப்பு, மீனவர்கள், பலத்த காற்று

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும்அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|