Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் - சவுமியா சுவாமிநாதன்

கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் - சவுமியா சுவாமிநாதன்

By: Karunakaran Sat, 25 July 2020 6:09:24 PM

கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் - சவுமியா சுவாமிநாதன்

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு தலைமையில் சமூக ஊடக நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஹெர்ட் இம்யூனிட்டி மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும் என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்த வேண்டும் எனவும், அதன்மூலம்தான் மந்தைத் தடுப்பாற்றலை உருவாக்குவதுதான் பாதுகாப்பானது எனவும், மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

sawmiya swaminathan,corona virus,coron death,world health organization ,சாவ்மியா சுவாமிநாதன், கொரோனா வைரஸ், கொரோன் மரணம், உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்தால்தான் ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம். அந்த வகையில் இயற்கையாக அதைப் பெறுவதற்கு இன்னும் நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில், 5 முதல் 10 சதவீதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதாக சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

மேலும் அவர், எங்களின் கணக்கின்படி தடுப்பூசி மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும். ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும் என கூறியுள்ளார்.

Tags :