Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 மாத யானைக்குட்டியை முதுமலை சரணாலயத்தில் வைத்து வளர்க்க முடிவு

4 மாத யானைக்குட்டியை முதுமலை சரணாலயத்தில் வைத்து வளர்க்க முடிவு

By: Nagaraj Thu, 16 Mar 2023 10:55:05 PM

4 மாத யானைக்குட்டியை முதுமலை சரணாலயத்தில் வைத்து வளர்க்க முடிவு

தருமபுரி: வனத்துறையினர் முடிவு... தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத யானை குட்டியை, கூட்டத்துடன் சேர்க்க முடியாததால், முதுமலை சரணாலயத்தில் வைத்து பொம்மன் - பெள்ளி தம்பதியினர் பராமரிப்பில் வளர்க்க, வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கடந்த 11-ம் தேதி, கட்டமடுவில் விவசாய கிணற்றில், தவறி விழுந்து மீட்கப்பட்ட யானைக்குட்டியை, சின்னாறு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைக் கூட்டத்துடன், சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர்

forestry,cub,couple,roaming,herd of elephants ,வனத்துறை, குட்டியானை, தம்பதி, சுற்றிதிரிந்தது, யானைக்கூட்டம்

இருப்பினும் கூட்டத்துடன் சேர்க்க முடியாததால், யானை குட்டியை பொம்மனுடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே கடந்த 5 நாட்களாக யானை குட்டியை பராமரித்த வனத்துறை ஊழியர் அழுதபடி அதனை வழியனுப்பினார்.

Tags :
|
|