Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பியது ஈரான்தான்; அதிகாரிகள் தகவல்

அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பியது ஈரான்தான்; அதிகாரிகள் தகவல்

By: Nagaraj Thu, 22 Oct 2020 12:27:37 PM

அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பியது ஈரான்தான்; அதிகாரிகள் தகவல்

அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்... அமெரிக்க வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை ஈரான் தான் அனுப்பியுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுபற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் கூறுகையில், "ஒரு தீவிரமான வலதுசாரி டிரம்ப் சார்பு குழுவில் இருந்து அந்த மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

spoof emails,russia,iran,voters,threat ,ஸ்பூப் மின்னஞ்சல்கள்,ரஷ்யா, ஈரான், வாக்காளர்கள், அச்சுறுத்தல்

அவை அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்துள்ளது. ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சில வாக்காளர்களின் பதிவு தகவல்களை ரகசியமாக பெற்றுள்ளன.

அனைத்து வாக்காளர்களை அச்சுறுத்தும் நோக்கத்திலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், சேதப்படுத்துவதற்கும் ஈரானின் 'ஸ்பூப் மின்னஞ்சல்கள்" அனுப்பியுள்ளன. அமெரிக்க வாக்காளர்களை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் அவன் நம்பிக்கையான விரோதிகளின் அவநம்பிக்கையான முயற்சிகள்" என்று அவர்.

Tags :
|
|
|