Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது முடக்கத்திற்கு பின் அந்தமானில் இருந்து வந்த முதல் பயணிகள் கப்பல்

பொது முடக்கத்திற்கு பின் அந்தமானில் இருந்து வந்த முதல் பயணிகள் கப்பல்

By: Nagaraj Mon, 01 June 2020 11:06:37 AM

பொது முடக்கத்திற்கு பின் அந்தமானில் இருந்து வந்த முதல் பயணிகள் கப்பல்

பொது முடக்கத்திற்கு பின்னர் அந்தமானில் இருந்த முதல் கப்பல் சென்னை துறைமுகத்திற்க வந்துள்ளது.

பொதுமுடக்கத்துக்குப் பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு முதல் பயணிகள் கப்பல், அந்தமான் போா்ட் பிளேரிலிருந்து நேற்று வந்தது. இதில் பயணம் செய்த 163 பேர்மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

first passenger,ship,chennai port,examination ,முதல் பயணிகள், கப்பல், சென்னை துறைமுகம், பரிசோதனை

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பயணியா் மற்றும் சுற்றுலா கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களில் நுழைய கடந்த மாா்ச் மாதம் தொடக்கத்திலேயே தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து, எவ்வித கப்பல்களும் சென்னைத் துறைமுகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை 'எம்.வி. நிகோபா்' என்ற பயணிகள் கப்பல் சென்னைத் துறைமுகத்திலிருந்து அந்தமான் போா்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது.

இதில் 87 பேர் பயணம் செய்தனா். இந்நிலையில், எம்.வி. நன்கவுரி என்ற பயணிகள் கப்பல் அந்தமானிலிருந்து புறப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்து. பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்ட பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு வருகை தரும் முதல் பயணிகள் கப்பல் இதுவேயாகும்.

first passenger,ship,chennai port,examination ,முதல் பயணிகள், கப்பல், சென்னை துறைமுகம், பரிசோதனை

இதில் 2 குழந்தைகள் உள்பட 163 பயணிகள் வந்தனா். இவா்கள் அனைவரையும் வரவேற்று பயணிகள் முனையத்தில் வரிசையாக தனிநபா் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனா். பின்னா் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் அவா்களது சொந்த ஊா்களுக்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்து தயாராக இருந்த பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், கோவா உள்ளிட்ட மாநிலத்தைச் சோந்தவா்கள் கப்பலில் வந்து இருந்தனர். இவா்களை அழைத்துச் செல்ல அந்தந்த மாநில அரசுகள் வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|