Advertisement

தமிழ்நாட்டில் இன்று வெயில் உயரும்

By: vaithegi Sun, 30 July 2023 11:03:42 AM

தமிழ்நாட்டில் இன்று வெயில் உயரும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால்,

இன்று முதல் வருகிற ஆக. 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

vail,puducherry,tamil nadu , தமிழ்நாடு, புதுச்சேரி,வெயில்

இதனை அடுத்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|