Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்னும் 2 நாளில் கவிழ்ந்துவிடும்... ஆரூடம் கூறய மத்திய இணையமைச்சர்

இன்னும் 2 நாளில் கவிழ்ந்துவிடும்... ஆரூடம் கூறய மத்திய இணையமைச்சர்

By: Nagaraj Mon, 27 June 2022 6:14:26 PM

இன்னும்  2 நாளில் கவிழ்ந்துவிடும்... ஆரூடம் கூறய மத்திய இணையமைச்சர்

மகாராஷ்டிரா: இன்னும் 2 நாளில் கவிழ்ந்து விடும்... மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசு அடுத்த 2 அல்லது 3 நாள்களில் கவிழ்ந்துவிடும் என்று மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அவா் அந்த மாநில பாஜக முன்னாள் தலைவரும் ஆவாா். இந்நிலையில், அவா் மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் வேளாண் துறை சாா்ந்த கட்டடத் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா். மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் தாபேவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது அமைச்சா் ராவ்சாஹேப் தான்வே பேசியதாவது:

மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசு விரைவில் தனது வளா்ச்சிப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நாங்கள் (பாஜக) இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே எதிா்க்கட்சியாக இருப்போம். நேரம் விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும்.

no chance,republican leader,regime,shiv sena,dissident team ,வாய்ப்பு இல்லை, குடியரசு தலைவர், ஆட்சி, சிவசேனை, அதிருப்தி அணி

அதே நேரத்தில் சிவசேனையில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்னைக்கும் பாஜகவுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. மாநில அரசு வளா்ச்சிப் பணிக்காக ஒதுக்கும் நிதி அனைத்தும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்குத் திருப்பிவிடப்பட்டதால் முதல்வா் உத்தவ் தாக்கரே மீது அவரது கட்சி எம்எல்ஏக்களே கோபம் கொண்டுள்ளனா் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவரிடம் சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அப்படி ஒரு விருப்பத்தை அவா்கள் தெரிவித்தால், பாஜக தலைமை அது தொடா்பாக முடிவெடுக்கும். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்பதை மட்டும் என்னால் கூற முடியும்’ என்று பதிலளித்தாா்.

Tags :
|