Advertisement

இங்கு இன்று கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 02 Feb 2023 3:42:01 PM

இங்கு இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 23:30 மணி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையிலி ருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும்,

இதையடுத்து காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என தெரிவித்து இருந்தது.

low pressure zone,heavy rain ,காற்றழுத்த தாழ்வு மண்டலம் ,கனமழை

இதனை அடுத்து இந்து தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :