Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமாம்

புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Sun, 03 Sept 2023 11:31:41 AM

புதுச்சேரியில் இன்னும்  6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமாம்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக,

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rainy,puducherry ,மழை ,புதுச்சேரி

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 6-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|