Advertisement

தமிழகத்தில் இன்னும் 6நாட்களுக்கு மழை தானாம்

By: vaithegi Mon, 18 Sept 2023 11:46:22 AM

தமிழகத்தில் இன்னும் 6நாட்களுக்கு மழை தானாம்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வருகிற 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

rainy,puducherry,tamil nadu,karaikal ,மழை ,தமிழ்நாடு புதுச்சேரி ,காரைக்கால்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன் அறிவிப்பில் கூறியுள்ளது.

Tags :
|