Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியில் வெயிலின் தாக்கம்... குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

இத்தாலியில் வெயிலின் தாக்கம்... குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

By: Nagaraj Thu, 20 July 2023 9:25:15 PM

இத்தாலியில் வெயிலின் தாக்கம்... குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

இத்தாலி: இத்தாலியில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெப்பச் சலனம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரேக்கத்தின் முக்கிய பகுதியும் அடங்கும். இந்நிலையில் இத்தாலியின் தலைநகர் ரோமில் சுட்டெரிக்கும் வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

avati,italy,people,sunny , அவதி, இத்தாலி, மக்கள், வெயில்

வெப்பச் சலனம் தாங்க முடியாமல் மக்கள் குடிநீருக்காக வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற நாடுகளில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் கொளுத்தி வருகிறது.

இத்தாலியில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை எட்டியதால் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. வெயிலின் காரணமாக சில பயணிகள் முன்கூட்டியே வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வெப்ப அலைகள் மோசமடைந்துள்ளன, வெப்பம் தொடர்பான இறப்பு அபாயத்தை உயர்த்துகிறது என்று உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags :
|
|
|