இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு... புதிய திட்டம் அறிமுகம்
By: Nagaraj Sat, 26 Nov 2022 1:20:59 PM
சென்னை: பஸ் ஸ்டாப் குறித்து பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் 'பஸ் ஸ்டாப் ஒலி அறிவிப்பு திட்டம்' இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ், ஆங்கிலத்தில்
அடுத்துவரக்கூடிய பஸ் ஸ்டாப் குறித்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள
ஸ்பீக்கர்கள் மூலம் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
பேருந்து
நிறுத்தத்திற்கு 300 மீட்டருக்கு முன்னதாக குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்-ன்
பெயர் குறித்த தகவல் பஸ்சில் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத்துறை
தெரிவித்திருக்கிறது
Tags :
bus stop |
tamil |