Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கமலாஹாரீசை விட அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர் - டிரம்ப் கருத்து

கமலாஹாரீசை விட அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர் - டிரம்ப் கருத்து

By: Karunakaran Sun, 30 Aug 2020 5:22:02 PM

கமலாஹாரீசை விட அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர் - டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களம் இறங்கி உள்ளார்.

மேலும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் நடைபெற்று வருகிறது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை கூறி வருகின்றார்.

ivanka,president,kamalahari,trump ,இவான்கா, தலைவர், கமலஹரி, டிரம்ப்

இந்நிலையில் நியூஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, நாட்டின் அதிபராக இதுவரை ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்க அதிபராக ஒரு பெண் வருவதை நான் விரும்புகிறேன். ஆனால் அது கமலாஹாரீஸ் அல்ல. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது. அவரது கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் அவரும் களம் குதிக்கிறார். ஆனால் அவரது செல்வாக்கு குறைந்து இருந்ததாக கூறினார்.

மேலும் அவர், 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலாஹாரீசை விட என் மகள் இவாங்கா டிரம்ப் போட்டியிட தகுதியானவர். இவாங்கா அதிபராக வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களை குறை சொல்ல மாட்டேன். இவாங்கா சிறந்த வேட்பாளராக இருப்பார். கமலாஹாரீசுக்கு மக்கள் ஆதரவு இல்லை. ஜமைக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரீஸ் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கறுப்பின பெண்ணாக உள்ளார் என்று கூறினார்.

Tags :
|