Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மனோதிடம் மிக்க சிறுமி ஜோதிகுமாரியை பாராட்டிய இவாங்கா டிரம்ப்

மனோதிடம் மிக்க சிறுமி ஜோதிகுமாரியை பாராட்டிய இவாங்கா டிரம்ப்

By: Nagaraj Sat, 23 May 2020 6:41:43 PM

மனோதிடம் மிக்க சிறுமி ஜோதிகுமாரியை பாராட்டிய இவாங்கா டிரம்ப்

புதுடில்லி; கொரோனா கட்டுப்பாடு ஊரடங்குக்கு மத்தியில் பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி, கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்துள்ளார்.

அரியானாவில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த ஜோதிகுமாரியின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஊரடங்கு பிறப்பித்ததால் மிகவும் வறுமை நிலைக்கு சென்றுள்ளார். இதனால் சொந்த ஊருக்கு போக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்லும் வழி தெரியாமல் தவித்து நின்றபோது மிகவும் துணிச்சலுடன் தனது தந்தையை சைக்கிள் அமர்த்தி பீகாருக்கு அழைத்து வந்துள்ளார். சிறுமியின் பாசம் மற்றும் வலிமையை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் மத்திய, மாநில அரசுக்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ivanka trump,twitter,appreciation,jyoti kumari ,இவாங்கா டிரம்ப், டுவிட்டர், பாராட்டு, ஜோதி குமாரி

இந்நிலையில் சிறுமி ஜோதி குமாரி சைக்கிள் மிதிக்கும் காட்சி குறித்து, இவாங்கா ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அவருடய அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என தெரிவித்து உள்ளார்.

Tags :