Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி நிலையங்கள் குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்

கல்வி நிலையங்கள் குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்

By: Nagaraj Wed, 07 Oct 2020 09:40:39 AM

கல்வி நிலையங்கள் குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்

கல்வி நிலையங்கள் குறித்து அறிவிப்பு... தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதற்குரிய அறிவுறுத்தல்கள் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டக் கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. கூட்ட நிறைவில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எங்களுடைய தற்போதைய நிலையில் அரசு அலுவலகங்கள் இயங்கலாம். அதேநேரத்தில் வர்த்தக நிலையங்கள் இயங்கலாம். ஆனாலும் கூட அனைவருக்கும் சுகாதார வழிகாட்டி நடைமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறைகளைப் பேணிச் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

practice,educational institutions,re-notification,necessary ,நடைமுறை, கல்வி நிலையங்கள், மறு அறிவித்தல், அவசியம்

ஒவ்வொரு துறையினரும் அதாவது தனியார் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், பேருந்து உரிமையாளர்கள், அரச பேருந்து சேவையினைச் சேர்ந்தவர்கள், சினிமா திரையரங்கினைச் சார்ந்தவர்கள், திருமண மண்டபம், பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் போன்றவை குறிப்பாக சந்தைகள் போன்றவற்றில் அந்த வழிகாட்டிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

அந்த வழிகாட்டிகளை முறையாக அமுல்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். முறையாகச் சமூக இடைவெளி பேணி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கை கழுவித் தொற்று நீக்கி நடைமுறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :