Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோலாரில் ஜெய் பாரத் காங்கிரஸ் பேரணி... ராகுல்காந்தி பங்கேற்பு

கோலாரில் ஜெய் பாரத் காங்கிரஸ் பேரணி... ராகுல்காந்தி பங்கேற்பு

By: Nagaraj Sun, 16 Apr 2023 11:26:07 PM

கோலாரில் ஜெய் பாரத் காங்கிரஸ் பேரணி... ராகுல்காந்தி பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகாவின் கோலாரில் இன்று ஜெய் பாரத் என்ற பெயரில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களின் பெயரும் மோடியுடன் முடிவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

இந்தப் பேச்சைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, மோடி சமூகத்தை அவதூறு செய்ததாக குஜராத் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு வழக்கில் ஜானின் கொடுக்கப்பட்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அரசு பங்களாவையும் ராகுல்காந்தி காலி செய்தார்.

adani,corruption,identity,rahul gandhi,review, ,அடையாளம், அதானி, ஊழல், ராகுல்காந்தி, விமர்சனம்

இதற்கிடையில், அதானிக்கு பிரதமர் மோடி செய்த உதவி குறித்து பேசியதால் தான் குறிவைக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், கோலாரில் மோடி சமூகம் குறித்து அவதூறு கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கிற்கு வித்தாக அமைந்த கோலாரில் ராகுல்காந்தி இன்று பேரணியில் பங்கேற்றார்.

கர்நாடகாவின் கோலாரில் இன்று ஜெய் பாரத் என்ற பெயரில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். பேரணியில் ராகுல்காந்தி பேசுகையில், அதானி ஊழலின் அடையாளம் என்று கூறினார்.

கர்நாடகாவில் அடுத்த மாதம் 29-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|