Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு கஷ்மீர் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியசுக்கும் கீழே.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு கஷ்மீர் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியசுக்கும் கீழே.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By: vaithegi Wed, 15 Nov 2023 3:53:26 PM

ஜம்மு கஷ்மீர் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியசுக்கும் கீழே..   பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ஜம்மு காஷ்மீர்: இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

எனவே இதன் காரணமாக அடுத்த 6 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் இந்நிலையில் குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் வெப்பநிலை குறைந்துள்ளது.

life,temperature,jammu and kashmir ,வாழ்க்கை ,வெப்பநிலை , ஜம்மு கஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் தற்போது ஒரு டிகிரி செல்சியஸுக்கு குறைந்த வெப்பநிலை காணப்படுகிறது.

இதனை அடுத்து தொடரும் பனிமூட்டத்தால் விளக்குகளை எரியவிட்ட படியே வாகனங்கள் சாலையில் செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் மூடுபனி காணப்படுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|