Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் ஜன. 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் ஜன. 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 18 Jan 2023 5:23:28 PM

சென்னையில் ஜன. 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் .... தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வண்ணம் கடந்த 2022ம் ஆண்டு முதல் அரசும் தனியார் துறைகளும் ஏராளமான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகின்றன.

மேலும் அத்துடன் தனியார் துறைகள் மாவட்டங்கள் தோறும் குறிப்பிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில்நாளை மறுநாள் சென்னையில் அரசு சார்பாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த முகாமில் 3 வயதிற்குட்டபட்டவர்கள் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

employment camp,chennai ,வேலைவாய்ப்பு முகாம்,சென்னை

இம்முகாமானது கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.

இதனை அடுத்து இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :