Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பான் நாட்டில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

ஜப்பான் நாட்டில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

By: vaithegi Mon, 25 July 2022 9:21:54 PM

ஜப்பான் நாட்டில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

டோக்கியோ: கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறது.

இதை அடுத்து இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டில் முதல் முறையாக டோக்கியோவில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

monkey measles,japan , குரங்கு அம்மை ,ஜப்பான்

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் 30 வயதிற்குட்பட்டவர் எனவும் அவர் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்த போது தான் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு இதுவரை 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :