Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

By: Karunakaran Fri, 28 Aug 2020 3:02:20 PM

உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக ஆகியும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப்பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமா அறிவிப்பை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பார் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன.

japan,prime minister abe,resign,health issues ,ஜப்பான், பிரதமர் அபே, ராஜினாமா, சுகாதார பிரச்சினை

அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய விரும்புகிறார், நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என அவர் கவலைப்படுவதாகவும், அதன் காரணமாக அவர் ராஜினாமா அறிவிப்பை வெளியிடவுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.

பிரதமரின் உடல்நிலை குறித்த பல ஊகங்கள் தொடர்ந்து பல வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் குறிப்பிடப்படாத நோய் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டார். அதன் பின்னர் சமீபத்திய நாட்களில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|