Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்

ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்

By: Karunakaran Thu, 03 Sept 2020 7:26:05 PM

ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமையை பெற்ற ஷின்ஜோ அபே, அண்மையில் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

japan,chief cabinet secretary,yoshihide suu kyi,prime minister ,ஜப்பான், தலைமை அமைச்சரவை செயலாளர், யோஷிஹைட் சூகி, பிரதமர்

தற்போது, ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் யோஷிஹைட் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 14-ந் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் யோஷிஹைட் சுகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யோஷிஹைட் சுகா ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.

Tags :
|