Advertisement

மதுரையில் மல்லிகை பூ ரூ.1,200-க்கு விற்பனை

By: vaithegi Sun, 23 Oct 2022 6:28:07 PM

மதுரையில் மல்லிகை பூ ரூ.1,200-க்கு விற்பனை

மதுரை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொண்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.மேலும் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது

madurai,mallikai ,மதுரை,மல்லிகை

இதனைத்தொடர்ந்து சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :