ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து 6 படங்கள் வெளியாகிறது
By: Nagaraj Sun, 07 June 2020 9:08:22 PM
அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 6 படங்கள் வெளியாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறந்த நடிப்பினால் தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று விளங்கி வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோமாளி. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் வெளியாக உள்ளன. பூமி, பொன்னியின் செல்வன், தனி ஒருவன் 2 உட்பட 6 படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
இத்தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் வெகு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனி ஒருவன் -2 படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.
Tags :
6 films |
fans |