Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்; மத்திய அமைச்சர் அறிவிப்பு

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்; மத்திய அமைச்சர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 10 Dec 2020 10:04:29 PM

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்; மத்திய அமைச்சர் அறிவிப்பு

இனி ஆண்டுக்கு 4 முறை JEE தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ-மெயின்) மற்றும் ஜே.இ.இ (அட்வான்ஸ்)க்கான தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் நான்கு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்த்துள்ளார்.

union minister,jee examinations,4 times,year ,மத்திய அமைச்சர், ஜெஇஇ தேர்வுகள், 4 முறை, ஆண்டு

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று ஆன்லைன் உரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், தேர்வுகளில் பங்கேற்கவும் புதிய வழிமுறையை உருவாக்கும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

இந்த தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே என ஒவ்வொரு மாதமும் ஜெஇ இ தேர்வுகள் நடத்தப்படும். இந்த 4 தேர்வில் எந்த தேர்வில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம். நான்கு தேர்வுகளில் பெறும் அதிக மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படும் என ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

Tags :