2023ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
By: Nagaraj Wed, 08 Feb 2023 11:54:30 AM
புதுடெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்... ஜேஇஇ தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. 2023ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் 20 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 மதிப்பெண்கள் பெற்ற அனைவரும் மாணவர்கள்.
50 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் பரிசீலனையில் இருப்பதால் அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ 2ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதன் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் .
Tags :